Tharani
Hello! Welcome to my blog. I would like to share the thoughts of mine.
Tuesday, January 27, 2015
கத்தரித் தோட்டத்து . . .
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறு யார்? - உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறு யார்? (1)
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவு பகலாக
ஏவல் புரிபவன் வேறு யார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறு யார்? (2)
Tuesday, January 6, 2015
தொலைத்த வாழ்க்கை!
அனைத்து வலைப்பூ பதிவாளர்களிற்கும் மனமார்ந்த வணக்கங்கள்! :)
என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த ஒரு புகைப்படத்தினை பகிரலாம் என்று நினைத்து நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளியின் பின்னர் இன்று வலைப்பூவினுள் நுழைந்துள்ளேன்!
ஒரு சிறுமி எந்தக் கவலையும் இல்லாது துள்ளி விளையாடும் இந்த புகைப்படம் தான் என்னை அவ்வளவாக பாதித்து சிறு பிராய நினைவுகளினை மறுபடியும் மனதில் ஓட விட்டிருக்கின்றது.
மர்ஜி லாங் (https://www.facebook.com/pages/Marji-Lang-Photography/174592652623121) அழகான புகைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இந்திய தேசத்து கலாசாரங்களை போகிற போக்கினில் பதிவுகளாக்கி காலத்திற்கும் நினைவுகளை உயிர்ப்பாக வைத்திருக்கக் கூடிய விதத்தில் தந்துள்ளார்.
எல்லாரிடத்தும் இதே பாதிப்புகள் ஏற்படுமா என்பது கேள்வியாக இருப்பினும், நான் பாதிக்கப் பட்டேன்!! :)
எல்லாரிடத்தும் இதே பாதிப்புகள் ஏற்படுமா என்பது கேள்வியாக இருப்பினும், நான் பாதிக்கப் பட்டேன்!! :)
நானும் இதே போல் என் சிறு பிராயத்தில் ஓடியாடி திரிந்த, இப்போதும் அப்படியே இருக்க பெரிதும் ஆசைப் படுகின்ற ஒரு சாதாரணமான பெண். ஆனால் நாம் 'அப்படியே' இருந்து விட முடியாது என்பதை காலம் எத்தனையோ படிப்பினைகள் மூலமாக கற்றுத் தந்திருக்கின்றது!
இன்றும் குழந்தைகளை காணும் போதெல்லாம் எதையோ தொலத்துவிட்டு எதையோ தேடும் ஒரு வாழ்க்கை தான் மனதில் தோன்றுகின்றது!!
உண்மையில், அற்புதங்கள் மட்டுமே நிறைந்துள்ள ஒரு உலகமெனில் அது குழந்தைப் பருவம் மட்டுமே!!!!!
உண்மையில், அற்புதங்கள் மட்டுமே நிறைந்துள்ள ஒரு உலகமெனில் அது குழந்தைப் பருவம் மட்டுமே!!!!!
இதனைக் காணும் இடத்து உங்களில் யாரேனும் ஒருவரிற்காவது உங்கள் குழந்தைப் பருவமும் கனவுகளும் மறுபடியும் தோன்றலாம். . .
நினைவுகளின் உயிர்ப்பில் தான் இருக்கின்றது நாம் தொலைத்து விட்ட வாழ்க்கை!
இன்னுமொரு பதிவில் சந்திப்போம்!
கனவுகளுடன். .
தாரணி.
Subscribe to:
Posts (Atom)

