Tuesday, January 27, 2015

கத்தரித் தோட்டத்து . . .




கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
          காவல் புரிகின்ற சேவகா! - நின்று
          காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல்
          வேலை புரிபவன் வேறு யார்? - உன்னைப் போல்
          வேலை புரிபவன் வேறு யார்?   (1)

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
         காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
          காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவு பகலாக
          ஏவல் புரிபவன் வேறு யார்? - என்றும்
          ஏவல் புரிபவன் வேறு யார்?       (2)







1 comment: